Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சேலம் மாவட்டம் மேட்டூரில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14, 15, 16 ஆகிய திகதிகளில் சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 20 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்டனர். இதில் 16 பேருக்குப் பார்வை பறிபோனது என்று தகவல்கள் வெளியானது. இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிசசைப் பெற்று வந்த போதிலும் இன்னமும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் மேலும் சிலருக்கும் கண்பார்வை பறிபோனதால் இப்போது கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது.

இவர்கள் அனைவருக்கும் கண்ணில் தொற்று ஏற்பட்டு நீர் வழிந்து, கண்கள் அழுகியதை போல இருக்கிறது.இதையடுத்து இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

0 Responses to தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com