Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்பியூட்டர்களின் பட்டியல் வெளியிடப் படுவது வழக்கம். இவ்வருடம் அந்த வரிசையில் சீனாவின் தேசிய கணிணிப் பொறியியல் தொழிநுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப் பட்ட 'சன்வே தாய்ஹுலைட்' என்ற கணிணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விநாடிக்கு 930 மில்லியன் மில்லியன் கணக்கீடுகளை இதனால் ஆற்ற முடியும். இக்கணிணியின் தரவுச் செயலிகள் அல்லது புராஸஸர்கள் அனைத்தும் சீனாவில் வடிவமைக்கப் பட்டு அங்கேயே தயாரிக்கப் பட்டவை ஆகும். ஆனால் சென்ற வருடம் முதலிடம் பிடித்திருந்த சீனாவின் தியான்ஹே-2 கணணியில் இண்டெல் நிறுவனத்தின் புராஸஸர்கள் பயன்படுத்தப் பட்டிருந்தன.

எனினும் தியான்ஹே-2 ஐ விட சன்வே தாய்ஹுலைட் சூப்பர் கம்பியூட்டர் 3மடங்கு அதிக வேகமும் செயற் திறனும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இவ்வருடம் உலகின் தலைசிறந்த சூப்பர் கம்பியூட்டராக சீனாவின் கம்பியூட்டர் தேர்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com