Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மும்பை சிறை நிர்வாகம் வித்தியாசமான பதில் அளித்துள்ளது.

மும்பை குண்டு வெடிப்பின்போது தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தார் என்கிற குற்றம் உறுதி செய்யப்பட்டு, மும்பை எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் நடிகர் சஞ்சய் தத். ஆனால், 5 வருட தண்டனைக்காலம் முடிவதற்கு 100 நாட்கள் முன்னதாகவே அவர் நன்னடத்தைக் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். எந்த நன்னடத்தையின் அடிப்படையில் சஞ்சய் தத்தை முன்னதாக விடுதலை செய்தீர்கள் என்று பேரறிவாளன் எரவாடா சிறை நிர்வாகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விக்கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதற்கு எரவாடா சிறை நிர்வாகம், மூன்றாம் நபர் குறித்து தகவல்களை பகிர்ந்துக்கொள்ள முடியாது என்று பேரறிவாளனுக்கு பதில் அனுப்பி இருந்தது. அரசு அதிகாரிகள் எடுக்கும் முடிவை அறிந்துக்கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது என்பதால், தமக்கு அந்த விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சஞ்சய் தத் விடுதலைக் குறித்த சிறைத்துறை விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பேரறிவாளன் மீண்டும் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார்.

அதற்கு பேரறிவாளன் தமது தரப்பு ஆட்களை நேரில் அனுப்பி, சிறை நிர்வாகத்திடம் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என்று, மும்பை எரவாடா சிறை நிர்வாகம் வித்தியாசமான பதிலை அளித்துள்ளது.

0 Responses to பேரறிவாளனுக்கு மும்பை சிறை நிர்வாகம் மழுப்பல் பதில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com