ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
1903ம் ஆண்டில் விருதுப்பட்டி கிராமத்தில் ஜூலை 15ம் நாள் பிறந்தார் காமராஜர். இவர் விடுதலைக்காக போராடியதால் தென்னகத்து காந்தி என்று அழைக்கப்பட்டார்.1953ம் ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்தபோது தந்தை செய்யும் தொழிலைத்தான் அவர்களின் பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்று குல கல்வியைக் கொண்டுவந்த ராஜாஜியின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ராஜாஜி ஆட்சி இழக்க நேர்ந்தது. காமராஜர் முதல்வரானார். அதிரடியாக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகளை திறந்தார். குழந்தைகள் பசியோடு இருந்தால் படிக்க முடியாது என்று மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதனால 7 சதவிகிதமாக இருந்த தமிழக கல்வியின் வளர்ச்சி 37 சதவிகிதமாக உயர்ந்தது.இதன் மூலம் படிக்காத மேதை என்று அழைக்கப்பட்டார்.
நேருவிற்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், லால் பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு இந்திரா காந்தியையும் பிரதமராக்கி கிங் மேக்கர் என்று புகழ் பெற்றார்.தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, நீர் ஆதாரத் திட்டங்களுக்கு வழி வகுத்து, தமிழகம் வளர்ச்சி நோக்கி செல்ல வித்திட்டார். இந்த மாபெரும் தலைவரான காமராஜர் 1972ம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று இறந்த போது, இவருக்கு சொந்தமாக சட்டைப் பையில் சில ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தன என்றும், இவருக்கு என்று எந்தவித வங்கி கணக்குகளும் இல்லை என்பதும், கடைசிவரை இவர் வாடகை குடியிருப்பில்தான் வசித்து வந்தார் என்பதும் குறிப்பிட்டது தக்கது.

0 Responses to ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று!