Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியாவுக்கான பொருளாதார மையத்தினை மாவட்டத்தின் எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் எழுந்துள்ள இழுபறியினை அவதானித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைக் கூட்டி இறுதி முடிவினை அறிவிக்குமாறு பணித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவினை மத்திய அரசாங்கம் ஏற்கும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

வவுனியாவுக்கான பொருளாதார மையத்தினை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தரப்பும், ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும் கூறி வருகின்ற நிலையில், இறுதி முடிவு எடுக்கப்படாது சர்ச்சை நீடிக்கின்றது. இந்த நிலையிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்ட பணிப்புரயை விடுத்துள்ளார்.

0 Responses to வவுனியா பொருளாதார மைய அமைவிட இழுபறி; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி முடிவை அறிவித்த மைத்திரி உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com