Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் தலையிட்ட காவலர்கள், அந்த குடும்பத்தினரை அடித்து துவைக்கும் காட்சியை பரப்பிய சமூக வலை தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

 திருவண்ணாமலையை அடுத்த செங்கம் கிராமத்தில் குடும்பத் தகராறு ஈடுபட்டுக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் மகனை போலீசார் கண்டித்துள்ளனர். ஆனால், அவர்கள் இது குடும்ப விஷயம் என்று சொல்ல, அதை காதில் வாங்காத போலீசார் மூன்று பேர், பெண்னின் கணவன் மற்றும் மகனை சரமாரியாக லத்தியால் தாக்கும் காட்சிகளை மக்கள் தங்களது கைபேசியில் பதிவு செய்து சமூக வலை தளங்களில் பரவவிட்டனர்.

இதையடுத்து தாக்கப்பட்ட ராஜா எனும் அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாக திருவண்ணாமலையில் நேற்று ஆட்டோக்கள் இயங்கவில்லை. இந்நிலையில், ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் கேட்டுக்கொண்டு இருப்பதை போல காவலர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், ஆர்.டி.ஓ விசாரணை நடந்துக்கொண்டு இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார். ஆர்.டி.ஓ விசாரணை முடிவடைந்தவுடன் வருகிற திங்கள் கிழமை அந்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதற்குள் தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்..

மேலும், மனுதாரர் கேட்டுக்கொண்டு உள்ளபடி, காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளான மூவருக்கும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அல்லது ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர். அதோடு, இம்மாதிரியான அத்துமீறல் கொண்ட செயல்களை மக்களிடம் பரப்பிய சமூக வலைத் தளங்களை பாராட்டுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to சமூக வலை தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com