Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே கட்சியையும், தலைமையையும் விமர்சிப்போருக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு வழங்கப்படாது என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி இளையோருக்கு முன்னுரிமை வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “அடுத்த வருடம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்த வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது கட்சித் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றன.

இதன்போது கட்சித் தலைமையையும், கட்சியையும் விமர்சிக்கும் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட கட்சிக்கு எதிராக செயற்படும் எவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது. இதற்கு பதிலாக இளம் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். பெரும்பாலான விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான திறமைசாலிகள் உள்ளனர்.

நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எந்தவிதத்திலும் கட்சியை விமர்சித்தவர்கள் கட்சித் தலைமையை விமர்சித்தவர்களுக்கு இடமில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பிலும் இதே வரையறை தான் கடைப்பிடிக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to கட்சியையும், தலைமையையும் விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படாது: சுதந்திரக் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com