நாட்டின் நலனை முன்னிறுத்தி எந்தக் கட்சியுடனும் அரசாங்கம் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை உள்வாங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்தக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது. மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரின் பெர்ணான்டோவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமால் ஸ்ரீபால டி சில்வாவும் ஒரே அமைச்சரவையில் அங்கம் வகிக்க முடிந்திருக்கிறது.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டு நலனுக்காக எந்தக் கட்சியுடனும் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயார்: ரணில்