வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தினை எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவு இன்னும் ஒரு வார காலத்துக்குள் எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு வாரத்துக்குள் கருத்துக்களை பெற்று அதற்கமைய பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மையத்தினை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்றும், ஓமந்தையின் அமைக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இந்த விடயத்திற்கு தீர்வு காணும் நோக்கில் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனநாயக ரீதியாக கருத்துக்கள் பகிரப்பட்டதாகவும், ஒருவார காலத்துக்குள், இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளாத வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் பெற்று, பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது குறித்து ஒரு வார காலத்துள் இறுதி முடிவு: கூட்டமைப்பு