வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தினை வவுனியாவின் ஓமந்தையில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் அநேகர் ஆதரவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்தனர்.
இதன்போது, பொருளாதார மையத்தினை ஓமந்தையில் அமைப்பதற்கு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

0 Responses to பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு!