ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை தொடர்ந்தும் மீறியும், சாவாலுக்கு உட்படுத்தியும் வரும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதவி நீக்கப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
“நீதிப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி பல தடவைகள் பகிரங்கமாகக் கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் அண்மையில் கருத்துக் கூறியிருப்பது அமைச்சரவை சம்பிரதாயம், சட்டம் என்பவற்றை மீறும் வகையிலானது.” என்றும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேச நீதிபதிகளைக் கோருகின்றனர். ஜனாதிபதி சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்கிறார். தான் இந்த இரண்டு நிலைப்பாட்டுக்கும் நடுவில் இருக்கின்றேன் என மங்கள சமரவீர கூறியுள்ளார்.
எனினும், அரசியலமைப்பின் படி அதற்கு இடமில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். யார் என்ன கூறினாலும் அரசியலமைப்பின் படி எந்தவொரு வெளிநாட்டு நீதிபதியையும் நியமிக்க இடமில்லை.
அரசியலமைப்பில் என்ன உள்ளது என்பதை முதலில் வெளிவிவகார அமைச்சர் அறிந்துகொள்ள வேண்டும். அது மாத்திரமன்றி அமைச்சரவை உறுப்பினர் என்ற ரீதியில் கூட்டுப் பொறுப்பிலிருந்து மங்கள சமரவீர விலகியுள்ளார். இது விடயத்தில் ஜனாதிபதியின் தலையீட்டை எதிர்பார்க்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதியின் கருத்துக்களை மீறும் வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும்: தினேஷ் குணவர்த்தன