Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐநாவை பாகிஸ்தான் தவறாகவே பயன்படுத்திக்கொள்கிறது என்று இந்தியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஐநாவில் மனித உரிமை குறித்த விவாதம் நடைப்பெற்றது. அப்போது பாகிஸ்தான் காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிய வருகிறது. இதுக் குறித்துப் பேசியுள்ள இந்திய உறுப்பினர் சையத் அக்பருதீன், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குகிறது என்று கூறினார்.அதோடு தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

அப்போது, பாகிஸ்தான் எப்போது ஐநாவை தவறாகவே பயன்படுத்திக் கொள்கிறது என்கிற குற்றச்சாட்டையும் சையத் வைத்துள்ளார் என்பதுக் குறிப்பிட்டத்தக்கது.

0 Responses to ஐநாவை பாகிஸ்தான் தவறாகவே பயன்படுத்திக்கொள்கிறது: இந்தியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com