சுவாதி கொலை வழக்கில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ராம்குமாரை போலீசார் காவலில் எடுத்து நேற்று இரவு முதல் விசாரித்து வருகின்றனர்.
மென்பொறியாளர் இளம்பெண் சுவாதி, கடந்த மாதம் மர்ம நபர் ஒருவரால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் திருநெல்வேலியை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த ராம்குமார்தான் கொலையாளி என்று போலீசார் சந்தேகித்து அவரைக் கைது செய்தனர்.இதுநாள் வரை புழல் சிறையில் இருந்த அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று, காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர்.அதோடு, போலீஸ் காவலில் இருக்கும் ராம்குமாரை மூன்று நாளும் அவரது வழக்கறிஞர் காலை அல்லது மாலையில் அரை மணி நேரம் சந்திக்கலாம் என்றும் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராம்குமாரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.இன்று, சுவாதியின் நண்பர் என்று சொல்லப்படும் பிலால் மாலிக்கிடம் ராம்குமார் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்குமாரின் உடல்நிலைக்கு எந்த நேரத்தில் எந்த குறைபாடு ஏற்பட்டாலும்,உடனடியாக சிகிச்சை அளிக்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையின் இரு மருத்துவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பதுக் குறிப்பிட்டது தக்கது.

0 Responses to சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை!