மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்புக்கு எதிராக, உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவைப் பொருட்படுத்தாது, மக்கள் மீது வரிச் சுமையைச் சுமத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியினர், பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை, யாழ். மக்களிடத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகளில், இன்று வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். இதன்போது அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே, அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த அரசு போலவே மைத்திரி அரசும் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுகின்றது: அநுர