Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாமக்கல் மாவட்டம் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது தமிழக அரசுக்கு ஒரு கரும்புள்ளி என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கை மிகுந்த துணிச்சலுடன் விசாரித்து வந்தவர் டிஎஸ்பி விஷ்ணுபிரியா. என்ன காரணத்தினாலோ இவர் தங்கியிருந்த வீட்டின் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவர் உயரதிகாரிகள் கொடுத்த மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துக்கொண்டார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால், சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் தங்களது மகளின் சாவுக்கு நீதி கிடைக்காது என்று கூறிய விஷ்ணுபிரியாவின் பெற்றோர் சிபிஐ விசாரிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு ஏற்கவிலை என்பதோடு, விசாரணை நீதிமன்றமும் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று உத்தரவிட்டது.

விஷ்ணுபிரியாவின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதையடுத்து விஷ்ணுபிரியாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதுக்கு குறித்துக் கருத்து த் தெரிவித்துள்ள கருணாநிதி, உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக அரசுக்கு கண்டனம் என்பதோடு, அரசுக்கு ஒரு கரும்புள்ளியாகவும் இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார்.

0 Responses to விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது தமிழக அரசுக்கு ஒரு கரும்புள்ளி: மு.கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com