“நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமைக்கப்படவுள்ள உண்மை கண்டறியும் ஆணைக்குழு, தமது அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது பயனுள்ளதாக அமையும்.” என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. குறித்த ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் 15ஆம் திகதியோடு நிறைவுக்கு வருகின்றது.
குறித்த ஆணைக்குழு தன்னுடைய இறுதி அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது. குறித்த அறிக்கையே, உண்மை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு உதவலாம் என்று மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

0 Responses to உண்மை கண்டறியும் ஆணைக்குழு எமது அறிக்கையை பயன்படுத்தலாம்: மக்ஸ்வெல் பரணகம