Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டு வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலாரி கிளிங்டன் அமெரிக்க அதிபராக வருவதற்கு முழுத் தகுதி உடையவரே அதிபர் ஒபாமா ஆதரவளித்துப் பேசியுள்ளார்.

அண்மையில் பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் பேசிய போதே அதிபர் ஒபாமா இவ்வாறு பேசியுள்ளார். இவர் தனது உரையில் மேலும் தன்னை விடவும், பில் கிளிங்டனை விடவும் ஏனைய வேட்பாளர்களை விடவும் ஹிலாரி அதிபரானால் மிகச் சிறப்பாக சேவை ஆற்றக் கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன் முறையாகப் பெண் வேட்பாளர் ஒருவர் களம் இறங்கிப் போட்டியிடுவது இதுவே முதன்முறை என்பதுடன் ஹிலாரி கிளிங்டன் வெற்றி பெற்றால் அமெரிக்க சரித்திரத்தில் முதல் பெண் அதிபராக மாறியும் சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னால் அதிபர் பில் கிளிங்டனின் துணைவியாரான ஹிலாரி கிளிங்டன் இதற்கு முன் ஒபாமா நிர்வாகத்தில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராகக் கடமை ஆற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஹிலாரி கிளிங்டன் அதிபராவதற்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமா பேச்சு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com