Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டமை இலங்கையின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலானது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்திரஜித் குமாரசுவாமி மந்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டமை தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலானது. விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜ் ராஜரத்தினம் எனும் நபருக்கு சொந்தமான நிறுவனமொன்றில் இந்திரஜித் குமாரசுவாமி ஆலோசகராக பணிபுரிந்தார். எனவே, அவரை மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது.” என்றுள்ளார்.

0 Responses to இந்திரஜித் குமாரசுவாமியின் நியமனம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலானது: விமல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com