Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையும், இந்தியாவும், சிங்கப்பூரும் முத்தரப்பு வேலைத்திட்டத்தில் இணைந்து முன்நோக்கி பயணிக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெற்காசிய கற்கை நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, தெற்காசிய புலம்பெயர்ந்தோரின் 3வது மாநாட்டினை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சீபா ஒப்பந்தம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்னா ஒப்பந்தம் மற்றும் இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்த ஒப்பந்தம் ஆகியவற்றினால் அடுத்தவருடத்தில் முத்தரப்பு வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளவேண்டும். இதனூடு, பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்தில் மிகவும் உச்ச பயனை அடைய முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையும், இந்தியாவும், சிங்கப்பூரும் முத்தரப்பு வேலைத்திட்டத்தில் இணைய வேண்டும்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com