எந்தவொரு தனிநபரும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மோதல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதிய மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது இடம்பெற்ற சிறிய மோதலை சிலர் பெரிதாக்கி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வெளியில் உள்ள சிலர் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சட்டத்தை யாரும் கையிலெடுக்க முடியாது: லக்ஷ்மன் கிரியெல்ல