Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தற்போதைக்கு ஆட்சி மாற்றமொன்றை யாராலும் ஏற்படுத்த முடியாது, தேசிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக அறிவித்துள்ளன.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்கவும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டனர். அதன்போதே, இருவரும் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளதாவது, "தேசிய அரசாங்கம் அமையவேண்டும் என்பதே மக்களின் விரும்பம். அதற்கேற்ற வகையிலேயே ஆணையும் வழங்கப்பட்டிருந்தது. மாறாக அமைச்சு பதவிகளுக்காக அரசாங்கத்தில் இணையவில்லை. தேசிய அரசாங்கம் உதயமானதால் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவால் 10 வருடங்களாக செய்யமுடியாததை 11 மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் செய்து முடித்துள்ளனர்.

நாட்டைக் கட்டியெழுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் வேளை, ஆட்சியைக் கவிழ்ப்போம் என ஒருசிலர் கூக்குரல் எழுப்புகின்றனர். ஐந்து வருடங்களுக்கு ஆட்சியை அசைக்கவே முடியாது. அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடு இருக்கலாம். அவை சுமுகமாகத் தீர்க்கப்படும். தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி இணைந்தமை காதல் திருமணம்போன்றதல்ல. பெரியோர்களால் பேசி முடித்துவைக்கப்பட்ட திருமணம். எனவே, பழகப்பழகத்தான் அன்பும், காதலும் வலுவடையும். ஐந்து வருடங்களுக்கு நாம் தொடர்ந்தும் இருப்போம். இரண்டரை வருடங்களுக்கு உடன்படிக்கை இருக்கின்றது. அது முடிவடைந்த பின்னர் புதிய உடன்படிக்கை பற்றி சிந்திக்கலாம்.” என்றார்.

கபீர் ஹாசீம் கருத்து வெளியிடுகையில், "ஜனநாயகம், சட்டத்தின் ஆதிக்கம், சமுக நீதிக்காகவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். மக்களின் எதிர்பார்ப்பை 11 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். பொது எதிரணியென கூறிக்கொள்பவர்கள் சிங்கத்தைபோல் கர்ச்சித்தாலும், கடந்த 10 வருடங்களில் எதனையும் சாதிக்க முடியாமல்போனது. இப்படியானவர்கள்தான் இன்று வீரவசனம் பேசுகின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐந்து வருடங்களுக்கு ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. துமிந்த திஸாநாயக்க கூறியதுபோல் இது பேச்சு திருணம்தான். அதுவே சிறந்தது.” என்றுள்ளார்.

0 Responses to ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com