வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது தொடர்பில், வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று அறிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி, பொருளாதார மையத்தினை ஓமந்தையில் அமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைக் கூட்டி இறுதி முடிவினை எடுப்பது தொடர்பில் அறிவித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அண்மையில் கடிதமொன்றை எழுதியிருந்தார். அதற்கு அளித்துள்ள பதிலிலேயே முதலமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைக் கூட்டி முடிவொன்றை எடுக்க வேண்டிய தேவை எதுவும் ஏற்படவில்லை என்றும், பொருளாதார மையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அவசியமில்லை; பொருளாதார மையம் ஓமந்தையிலேயே அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்