Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிழல் பிரதமரானார் மஹிந்த

பதிந்தவர்: தம்பியன் 07 July 2016

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) நிழல் அமைச்சரவையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் பொறுப்போடு, அவரிடம் பாதுகாப்பு மற்றும் மத விவகார அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை கூடிய கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிழல் அமைச்சரவை விபரம்:

மஹிந்த ராஜபக்ஷ- பிரதமர், பாதுகாப்பு மற்றும் மதவிவகாரம்.
பந்துல குணவர்தன- நிதி
விமல் வீரவங்ச- வீடமைப்பு
டளஸ் அழகப்பெரும- கல்வி
ரஞ்சித் சொய்சா- மாகாண சபைகள்
ஸ்ரீயானி விஜேவிக்கிரம- பெண்கள், சிறுவர் விவகாரம்
நாமல் ராஜபக்ஷ - வெளியுறவுத்துறை
குமார வெல்கம – துறைமுகம்
சமல் ராஜபக்ஷ - விமான சேவைகள், பெருந்தெருக்கள்
ரோஹித அபேகுணவர்தன- மின்சக்தி, எரிசக்தி
விஜித பேரகொட – வனஜீவராசிகள்
எஸ்.சி. முத்துகுமாரன- தபால்

0 Responses to நிழல் பிரதமரானார் மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com