ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதாக பெரும்பான்மை மக்கள் வாக்களித்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் கேமரூன் பதவியை ராஜினாமா செய்த பின் புதன்கிழமை கன்சவேர்டிவ் கட்சியின் தெரெசா மாய் வரலாற்றில் பிரிட்டனின் 2 ஆவது பெண் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.
தெரெசா மாய் இனை எதிர்த்துப் போட்டியிட்ட அண்ட்ரெயா லீட்சம் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகியதன் பின்னர் தெரெசா மாய் தனித்த போட்டியாளராகத் திகழ்ந்தார். இந்நிலையில் லீட்சம் இன் முடிவினை வரவேற்ற கேமரூன் ஓர் பிரதமராக தான் தனது ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் மகாராணி எலிசபெத் II இடம் புதன்கிழமை சமர்ப்பிக்க முன்னர் பொது இல்லத்தில் ஊடகங்களின் இறுதிக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமரை பதவிப் பிரமாணம் செய்து வைப்பதிலும் எலிசபெத் மகாராணியாருக்கு அரசமுறை பங்கு உள்ளது. தெரெசா மாய் இற்கு முன் பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமராகத் திகழ்ந்த மார்கரெட் தாச்சர், தனது ஆட்சிக் காலத்தில் இரும்பு ராணி என்று பெயர் பெற்று புகழோடு விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரிட்டன் பிரதமர் கேமரூன் பதவி விலகல்!: புதிய பிரதமராக தெரசா அறிவிப்பு