Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஆண்டு சுகாதார அமைச்சு மேற்கொண்ட கணக்கெடுப்பொன்றின் பிரகாரம், இலங்கையில் சிகரெட் புகைப்போரில் நூற்றுக்கு மூன்று வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அபாயத்திலிருந்து இளம் தலைமுறையை விடுவிப்பதற்கு அனைத்து தரப்பினரதும் உடனடிக்கவனம் அவசியமாகவுள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி, அதற்காக செய்யப்பட வேண்டிய எல்லா விடயங்களையும் அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ‘போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற நாடு’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது கட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று எமது நாட்டு மக்கள் மிக ஆபத்தான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டிருப்பதோடு இலங்கையின் சனத்தொகையில் 45,000 பேர்கள் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். சுமார் 2 இலட்சம் பேர் கஞ்சாவவைப் பயன்படுத்துகின்றனர். இலங்கையில் சிகரெட் பயன்படுத்துபவர்களில் நூற்றுக்கு மூன்று வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 2015 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்த நாட்டில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு 23.4 வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் இவ்வருட நிறைவில் 25 நிருவாக மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படும். போதைப்பொருளிலிருந்து விலகியிருத்தல் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்தப்படும். இந்த எல்லா நடவடிக்கைகள் தொடர்பிலும் முதலாவது முன்மாதிரி அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கப் பெறவேண்டும். அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் இதற்கு நேரடிப் பங்களிபை வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையில் சிகரெட் புகைப்போரில் மூன்று வீதமானவர்கள் பள்ளி மாணவர்கள்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com