கடந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டுவிட்டு, தற்போது கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களே, நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பேரணி செல்லத் தயாராவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணி முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தகுந்த பதிலை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேரணியின் மூலம் அவர்கள் கோருவது, ஊழல்வாதிகள் மற்றும் மோசடிகாரர்களுக்கு மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறே என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு கூட்டு எதிரணி எதிர்வரும் நாட்களில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பேரணியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஊழல் மோசடிக்காரர்களே அரசாங்கத்துக்கு எதிராக பேரணி செல்லத் தயாராகின்றனர்: ரணில்