Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அழகான உருவத்தை விட அழகான நடத்தையே நல்லது'- இது 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி ராம்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த வரிகள்.

எதை நினைத்து -இப்படி பதிவிட்டானோ, சென்னையில் கொல்லப்பட்ட ஐ.டி பணியாளர் ஸ்வாதி கொடூர கொலை வழக்கில் கொலையாளியாகி கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கும் இப்போது இந்த வரிகள் பொருந்துகின்றன.

சாதித்த சாகசப் போலீஸ் - ஊடகங்களிலும் வலைத் தளங்களிலும் பத்து தினங்களுக்கு மேலாக இன்னும் விவாதிக்கப்படும் கொலை வழக்கு விசாரணையை அருகிலிருந்து பார்த்த காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது நிறைய விவரங்கள் கிடைத்தன. அதில் உள்ள மர்மங்களும் தொடர்ந்தன.

சென்னை சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த ஸ்வாதியை அதே பகுதியில் உள்ள ஏ.எஸ். மேன்ஷனில் குடியிருந்த ராம்குமார் கடந்த 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தான் என போலீசார் கூறுகிறார்கள்.

நெல்லை மாவட்டம் செங் கோட்டைக்கு பக்கத்தில் உள்ள சொந்த கிராமமான மீனாட்சி புரத்தில் ராம்குமார் தனது வீட்டில் பதுங்கியிருக்கிறான் என்பதைக் கண்டறிந்து, மிக ரகசியமாக அந்தத் தகவலைப் பாதுகாத்து, உயரதிகாரிகள் மூலம் அது சம்பந்தப்பட்ட பகுதியின் இன்ஸ்பெக்டருக்குத் தெரி விக்கப்பட்டு, ஜூலை 1-ந் தேதி இரவில் போலீஸ் டீம் அங்கே நுழைகிறது.

மாட்டுக்கொட்டகையில் படுத்திருந்த ராம்குமார், போலீஸைப் பார்த்ததும் பயந்துபோய், தன் கழுத்தை துண்டு பிளேடால் அறுத்துக் கொண்ட நிலையில், அவரை உயிருடன் பிடித்து, ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவ மனையில் அனுமதித்து, சிகிச்சை யளித்து உயிர் பிழைக்க வைத்து, கொலையாளி என்பதை ஒப்புக் கொள்ள வைத்துள்ளது காவல் துறை டீம்.

சாட்சிகளே இல்லாத நிலையில், புலனாய்வு மூலம் தன் திறமையை தமிழக போலீசார் நிரூபித்துள்ளதற்கு முதல்வரி லிருந்து பலரும் பாராட்டியுள்ளனர். ராம்குமார் பிடிபடும் முதல்நாள் வரை, யார் குற்றவாளி என்பதே தெரியாமல் இருந்த நிலையில், திடுமென அதிகாலை எழுந்து டி.வி.யை ஆன் செய்த பொதுமக்களுக்கு, ஸ்வாதி கொலைக் குற்றவாளியை அடை யாளம் காட்டி சாகசம் செய்திருக்கிற போலீசார் பாராட்டுக் குரியவர்கள்.

இத்தனை நாட்கள் ஏன்? - ஸ்வாதியின் வீடு உள்ள சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள மேன்சனிலேயே தங்கி யிருந்த ராம்குமாரைப் பிடிக்க 8 நாட்கள் ஏன் என நாம் போலீசாரிடம் கேட்டதற்கு, அதற்கு காரணம் ஸ்வாதியின் தந்தை கோபாலகிருஷ்ணன்தான் என்கிறார்கள் மெல்லிய குரலில்.

புலனாய்வுக்கு ஸ்வாதி குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு தந்தனர் என மீடியாக்களிடம் போலீஸ் சொன்னாலும், ஒரு குடும்பத்தின் மனநிலை இந்த சமூகச் சூழலில் எப்படி இருக்கும் என்பதை போலீசார் தங்கள் புலனாய்வின் போது ஸ்வாதி குடும்பத்தார் மூலம் உணர்ந்துள்ளனர்.

"த்ரிஷ் யம்' படத்தில் மோகன்லாலும், அதன் ரீ-மேக்கான "பாபநாசம்' படத்தில் கமலும் பட்ட அவஸ்தையைப்போல இருந்துள்ளது ஸ்வாதி குடும்பம்.

உயர்மட்டத் தொடர்புகள் - பிராமண சமூகத்தவரான ஸ்வாதியின் அப்பா கோபால கிருஷ்ணன், பா.ஜ.க.வின் உறுப் பினர் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

ஹெச்.ராஜாவுக்கு நெருக்கமானவரும்கூட. போலீஸின் புலனாய்வுக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், சி.எம். செல்லில் புகார் தரக்கூடியவராக இருந்திருக்கிறார். அரசு, காவல்துறை, நிர்வாகம் எனப் பல மட் டங்களிலும் அவருக்கு சமுதாய ரீதியான தொடர்பும் ஒத்துழைப் பும் கிடைத்துள்ளது.

ஸ்வாதி கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் தன் வேத னையை அடக்க முயன்றிருக் கிறார், தன் மகளை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்த தந்தை. கொலையாளி ஸ்வாதியின் வாயில் வெட்டியிருக்கிறான் என்ற தகவல் அறிந்த கோபாலகிருஷ்ணன், அதுபற்றி தனது பா.ஜ.க நண்பர்களிடம் கூறியுள்ளார்.

நமது கட்சிப் பிரமுகர்கள் இப்படித்தான் வெட்டிக் கொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள் என்று பா.ஜ.க. நண்பர்கள் சொன்னதும், அந்த கோணத்திலேயே கோபாலகிருஷ்ணன் பேச ஆரம்பித்துள்ளார். "எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது' என மனதில் உள்ளதைப் பகிர்ந்துள்ளார்.

ஸ்வாதியின் நட்பும் தந்தையின் சந்தேகமும் - ஸ்வாதியும் சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் வசிக்கும் முகம்மது சித்திக் பிலால் மாலிக்கும் ஒண்ணா படிக்கிற காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள். மாமு, மச்சான் என தனது நண்பர்களை அழைக்கும் வழக்கம் கொண்ட ஸ்வாதி, பிலாலின் வீட்டிற்கு எந்த நேரத்திலும் இயல்பாகப் போய் வருவதும் அவரது தந்தைக்கு புரிபடாததாகவே இருந்துள்ளது.

பிலாலை ஸ்வாதி காதலிக்கிறாரோ என்று பொறி தட்டியுள்ளது. பிராமண வகுப்பைச் சேர்ந்த ஸ்வாதி இசுலாமிய இளைஞருடன் இந்தளவுக்கு நட்பு கொண்டிருப் பதை விரும்பாத கோபாலகிருஷ்ணன், இது தன் சுற்றத்தார் மத்தியில் சிக்கலை உண்டாக்கும், ஸ்வாதியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் எனக் கோபமடைந்த அவர், நெதர்லாந்தில் செட்டில் ஆகியிருக்கும் தன் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஸ்வாதியை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமானார்.

ஸ்வாதியோ, "நானும் பிலாலும் நண்பர்கள் தான். எனக்கு நண்பர்களாக உள்ள ஆண்களை மாமு, மச்சான் என்று கூப்பிடுவது ஒரு ஸ்டைல் அவ்வளவுதான்' எனச் சொன்னதுடன், அப்பா செய்த திருமண ஏற்பாடுகளுக்கு எந்தவிதமான தடையும் சொல்லவில்லை. திருமண ஏற்பாடுகளுக்கு பிறகு பிலாலை ஸ்வாதி சந்திப்பது சரியாக இருக்காது என நினைத்த கோபாலகிருஷ்ணன், ஸ்வாதியை தனது ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு போய் ரயிலேற்றி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பிலாலை விசாரித்த போலீஸ் - ரயில் நிலையத்தில் ஸ்வாதி பிணமாகக் கிடந்ததைப் பார்த்த கோபாலகிருஷ்ணன், "உனக்கு எவ்வளவுதான் என்னால் பாதுகாப்பு கொடுக்க முடியும்' என்றபடி பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டார். கொடூரக் கொலை நடந்ததை அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த பிலால், அங்கே ஸ்வாதியின் நிலையைக் கண்டு கதறினார்.

ஆனால், போலீசின் முதல் கட்ட விசாரணையில் குறிவைக்கப்பட்டவர் பிலால்தான். போலீசிடம், தனக்கும் ஸ்வாதிக்குமான பழக்கம் குறித்து பிலால் விளக்கமாகவும் உருக்கமாகவும் சொல்லியிருக்கிறார். தன்னிடம் ஸ்வாதி, "நீயும் நானும் நிரந்தர நண்பர்கள்' என சொன்னதையும், ஸ்வாதி தன்னிடம் ஒளிவுமறைவின்றி பகிர்ந்துகொண்ட தகவல்களையும், தான் ஸ்வாதியிடம் பழகிய விதத்தையும் விளக்கியுள்ளார்.

ஸ்வாதியுடனான நிகழ்வுகள் குறித்து சொல்லும் போதெல்லாம் பிலால் அழுதிருக்கிறார்.. அதைப் பார்த்த ஐஸ் அவுஸ் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி பிலாலை ஸ்வாதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆறுதல்படுத்தியுள்ளார்.

அதன்பின், "நீ ஸ்வாதியை எங்கு சந்திப்பாய்' என போலீஸார் கேட்க, ரயில் நிலையத்திற்கு ஸ்வாதி செல்லும் ரூட்டைக் காட்டியிருக்கிறார். கோபாலகிருஷ்ணன் சொன்னதற்கும் பிலால் சொன்னதற்கும் மாறுபாடு இருந்துள்ளது.கொலை நடந்த நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் ஆன ஸ்வாதியின் சாம்சங் கேலக்சி மொபைல் போன் அதன்பின் ஆன் ஆனது,

ஸ்வாதியின் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து தான் என ஏற்கனவே போலீசார் கண்டுபிடித்து வைத்திருந்த ஒரு தகவலும் ஸ்வாதி நடந்து செல்லும் வழியில் ஏ.எஸ்.மேன்ஷன் இருந்ததும், போலீசாரின் கவனத்தை அதன் பக்கம் திருப்பியது. அங்குதான் ராம்குமார் தங்கியிருந்தான்.

ஸ்வாதி குடும்பத்தின் தயக்கம் -"பாவம்ங்க சந்தான கோபாலகிருஷ்ணன்' என்று ஸ்வாதியின் அப்பாவுக்காக இரக்கப்பட்ட அவரது குடும்ப நண்பர்கள், ""ஆசையாசையாய் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சாரு. ஆனா, தம்பதிகளுக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிஞ்சுபோயிட்டாங்க.

ஸ்வாதியின் அக்கா நித்யா மறுமணம் செய்றதுக் கான வேலைகள் நடந்துக்கிட்டிருந்ததால, "அக்காவோட கல்யாணத்துக்கப்புறம்தான் என்னோட மேரேஜ்'ன்னு சொல்லிக்கிட்டிருந்தா ஸ்வாதி. நல்லா வாழணும்ங்கிறதுக்காகத்தான் ஸ்வாதியும் நித்யாவும் சேர்ந்து இ.எம்.ஐ. மூலமா புதுசா ப்ளாட் வாங்கியிருக்காங்க.

ஆனா, அந்த வீட்டுல வாழக்கூட முடியாமப்போச்சு ஸ்வாதி யால'' என்று உச் கொட்டுகிறவர்கள், ""பிலாலிடம் ஸ்வாதி காட்டிய நட்பையே கோபாலகிருஷ்ணன் சந்தேகப்பட்ட நேரத்தில்தான், ஸ்வாதி கோயி லுக்கு செல்லும் வழியில் உள்ள மேன்ஷனில் தங்கியிருக்கும் ராம்குமார் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கான்.

ராம்குமாருக்கும் ஸ்வாதிக்கும் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஷிப்தான். மாமு, மச்சான்னு கலாய்க்கிறது யூஷ்வல்தானே, அதை அந்தப் பையன் லவ்வுன்னு நினைச்சிக்கிட்டு, நேரில் வந்து புரபோஸ் பண்ணியிருக்கான். நட்பா பழகினதை லவ்வா எடுத்துக்கிட்ட ராம்குமாரை ஸ்வாதி திட்டியிருக்கா.

அதுக்காக இப்படி கொலை பண்ற அளவுக்கு போவான்னு யாருமே எதிர்பார்க்கல. ஸ்வாதியை ராம்குமார் பின் தொடர்வது, ஸ்வாதி தன்கூட படித்தவனுடன் கொண்டிருந்த நட்பு இதெல்லாம் மீடியாக்களில் தவறா பரவிடுமோங்கிற பயத்தில்தான் போலீஸ்கிட்ட ஸ்வாதி அப்பா வாய் திறக்காம இருந்தாரு.

அவர்கள் வாய்திறந்தால் கொலையாளியை எப்பவோ பிடிச்சிருக்கலாம். ஆனா பெண்ணை பெற்றவராச்சே.. சமூகத்துக்குப் பயந்துதானே வாழணும்'’’ என்கிறார்கள். ஃபேஸ்புக் என்பதை இளையதலைமுறை கையாளும் விதத்தினால், ஓர் இளம்பெண்ணின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. ஓர் இளைஞன் கொடூர கொலைகாரனாகியுள்ளான்.

அடக்கி வாசித்த கமிஷனர் - ராம்குமாரை சொந்த ஊரில் போலீசார் கைது செய்த பிறகு, சென்னையில் பத்திரிகை யாளர்களை சந்தித்தார் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன். ""இந்த வழக்கில் ஒரே குற்றவாளி ராம்குமார்தான். அவனைப் பிடித்துவிட்டோம்'' என்றவர், ஸ்வாதி மீது ராம்குமார் ஒரு தலைக் காதல் கொண்டிருந்ததாகவும், ஸ்வாதி ஏற்காததால் கொலை நடந்திருக்கும் என்றும் சொன்ன கமிஷனரிடம், ராம்குமார் ஒருதலையாக காதலித்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று மீடியாக்கள் கேட்க, கமிஷனரோ, "விசாரணைக்கட்டத்தில் எதையும் வெளியிட முடியாது' என அடக்கி வாசித்தார்.

கொலை செய்துவிட்டு ராம்குமார் பைக்கில் ஒருவருடன் செல்வதுபோன்று போலீஸ் வெளியிட்ட சி.சி.டி.வி. காட்சியை சுட்டிக்காட்டி, ராம்குமாரோடு பைக்கில் சென் றது யார்? ராம்குமார் வேறு யாருக்காகவோ ஸ்வாதியைக் கொல்ல கூலிப்படையாக பயன்படுத்தப்பட்டாரா? என சரமாரியாக செய்தியாளர்கள் கேட்டதற்கு "காவல்துறை அளித்த விளக்க நோட்டீஸை படியுங்கள்' என ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார் கமிஷனர்.

ராம்குமார் வாக்குமூலம் - ஸ்வாதியை நேரில் பார்த்து பழகிய மூன்றே மாதத்தில் அவளைக் கொலை செய்யும் அளவிற்கு ராம்குமார் போவானா என போலீஸாரிடம் கேட்டதற்கு, நெல்லையில் அவன் கைது செய்யப் பட்ட பிறகு அளித்த வாக்குமூலத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

படிக்கிற காலத்திலிருந்தே ஃபேஸ்புக்கில் ஆக்ட்டிவ்வாக இருந்திருக்கிறான் ராம்குமார். அவன் தனது படத்தை அதில் பதிவிட, அவனது கல்லூரி நண்பர்கள் செங்கோட்டை சிங்கம், ஐன்ஸ்டீன் அழகன் (ஐன்ஸ்டீன் கல்லூரி யில் படித்தான்) என்று வர்ணித்து உசுப்பேற்றி யுள்ளதை போலீஸ் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

ராம்குமாரின் வாக்கு மூலம் எனக் காட்டும் போலீஸ் அதில், ""பேஸ்புக்கில் ஸ்வாதியுடன் 2015ம் ஆண்டே நண்பராகப் பழகினேன். ஸ்வாதி தனது நட்பு வட்டாரத்திற்கென ஒரு வாட்ஸ்-அப் குரூப் இயக்கி வந்தார். அதில் நான் சமூக அக்கறை யுடன் இடும் கருத்துகளை ஸ்வாதி ஷேர் செய்வார். அதற்காக என்னைப் பாராட்டுவார்.

அவருடன் நட்பை நேரில் தொடர சென்னை வந்தேன். வெறும் ஃபேஸ்புக் நண்பனான என்னை சூர்யா என்கிற நண்பர் கோயிலில் வைத்து ஸ்வாதியிடம் நேரில் அறிமுகம் செய்தார். தினமும் அவருடன் ரயில்நிலையத்திலும் கோயிலிலும் பேசினேன். அவரிடம் எனது காதலை தெரிவித்தேன். அதை அவர் ஏற்கவில்லை.

அவர் என்னைப் பற்றி விசாரித்தார். நான் எஞ்சினியரிங் ஃபெயில், துணிக்கடையில் வேலை பார்க்கிறேன் என்று சொன்னேன். பல முறை வலியுறுத்தியும் என் காதலை ஏற்காத ஸ்வாதி, "நீ கறுப்பாக தேவாங்கு போல் இருக்கிறாய்' என்று எரிந்து விழுந்தார். திரும்பத் திரும்ப இப்ப டிச் சொன்னார்.

எஸ்.ஜே. சூர்யாவின் படங்களைப் பார்த்த நான், சினிமா டைரக்டராகும் ஆசையில் முயற்சி செய்து வந்தேன். என் நடை, உடை, பாவனைகளை மாற்றி ஸ்வாதியை பின்தொடர்ந்து கெஞ்சினேன். "இப்படி செய்தால், என் அப்பாவிடம் சொல்லிடுவேன்' என்று எச்சரித்தார். ஆனால் அப்படி சொல்லவில்லை.

அதனால் என்னை அவர் லவ் பண்ணுவதற்கான சிக்னல் என நினைத்தேன். இறுதியாக அவரிடம் "காதலுக்கு சம்மதமா? இல்லையென்றால் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்-அப் பிலும் என்னைப் பாராட்டியதற்கான காரணம் காதல் இல்லையா' என கேட்டேன். அவர் "போடா தேவாங்கு' என்று மறுபடியும் சொன்னார்.

அந்த ஆத்திரத்தில்தான் அவரது வாயை வெட்டினேன். அடுத்து அவர் கழுத்தை வெட்டினேன்'' என்று வாக்குமூலம் தந்ததாக போலீஸ் கூறுகிறது.சொந்த ஊரில் ராம்குமார் பற்றி விசாரித்த போது, ""அவனது வீட்டருகேதான், அவனது பாட்டி கடை வைத்திருக்கிறார். நான்கு வருடத் துக்கு முன்பு அவன் கடையில் இருந்தபோது, கடைக்கு வந்த கிராமத்து பெண் ஒருவரிடம் எசகுபிசகாக நடக்கப் பார்த்தான்.

அந்தப் பெண் சத்தம் போட்டு தெருவைக்கூட்ட, ராம்குமார்க்கு தருமஅடி விழுந்தது. அவனோட அப்பா-அம்மா அவனை கடுமையா கண்டிச்சாங்க. இது வயசுக் கோளாறு விவகாரம்னு விட்டுட்டோம். ஆனா, அவனுக்கு அதே ஆசை இருந்திருக்கணும். மற்றபடி கொலை செய்வானான்னு தெரியாது'' என்கிற வர்கள், அவன் கைது செய்யப்பட்ட விதம் குறித்து பலத்த சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.

கொலையாளி உயிருக்கு ஆபத்து? - மேலிடம் வரை செல்வாக்குள்ள சமுதாயத் தை சேர்ந்த குடும்பம் என்பதால் ஸ்வாதி பற்றி உணர்ச்சி வேகத்தில் ராம்குமார் எதுவும் வாய் திறந்து விடக் கூடாது.. என்ற அக்கறையினாலேயே ராம்குமாரை பேச விடாமல் செய்யும் யுக்தியாக இந்தக் கழுத்தறுப்பு வேலை நடந்திருக்கிறது என்ற சந்தேகம் ஊரில் பலருக்கும் உள்ளது.

போலீஸ் பிடிக்க வந்த நேரத்தில், அந்தப் பகுதியில் கரண்ட் கட் ஆகியுள்ளது. அதனால் ராம்குமாரே கழுத்தை அறுத்துக்கொண்டானா என்ற சந்தேகமும் ஊர் மக்களிடம் உள்ளது. ரயில் தண்டவாளத்தைக் கடந்து ஓடும் சி.சி.டி.வி உருவத்தின் கையில் அரி வாள் இல்லை. சட்டையில் இரத்தக்கறையும் இல்லை.

ஆனால் போலீசோ இரத்தக்கறை படிந்த சட்டையை அவனோட ரூமிலிருந்து எடுத்ததாக சொல்லுது.இத்தனை டெக்னிகலாக உயிருக்கு பங்கம் வராமல், பிளேடால் ஒருவன் கழுத்தை அறுத்துக் கொள்ள முடியுமா? முதலில் பேச விடாமல் செய்து, பிறகு "நீ இப்படித்தான் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்' என்று வகுப்பு எடுத்துவிட்டு, அப்புறம் பேச வைத்த காரியம்தான் இப்போது நடந்திருக்கிறதோ என்கிற ரீதியில் சந்தேகம் கிளப்புகிற மீனாட்சிபுரம், விசாரணை முடியும்வரை ராம்குமார் உசுரோடு நல்லபடியாக இருப்பானா என்றும் பயப்படுகிறது.

தொடரும் மர்மங்கள் - போலீஸ் சுட்டிக்காட்டும் ராம்குமாரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், ஸ்வாதியிடம் அவன் நேரில் பேசியிருக்கிறான். அப்படியிருக்க, யாரோ ஒருவன் தன்னைப் பின் தொடர்வதாக தன் தந்தை யிடம் சொன்ன ஸ்வாதி, அவன் தனக்கு அறிமுக மான ராம்குமார்தான் என ஏன் சொல்லவில்லை.

தனது மனதில் உள்ளதை நட்புமுறையில் பகிர்ந்து கொள்ளும் பிலாலிடம்கூட ஏன் ராம்குமார் பெய ரைச் சொல்லவில்லை? ஸ்வாதிக்கும் ராம்குமாருக் கும் வீட்டுக்கு அருகேயுள்ள கோயிலில் வாக்கு வாதம் நடந்திருக்கிறது. ராம்குமார், ஸ்வாதியைப் பின்தொடர்வதை அந்தக் கோயிலின் குருக்கள் பார்த்துள்ளார்.

இதுபோல அந்தப் பகுதியில் வேறு யாராவது பார்த்துள்ளார்களா? ராம்குமார்தான் ஒரே கொலையாளியா, இதன் பின்னணியில் இன் னும் பல சங்கதிகள் புதைந்துள்ளனவா? இத்தனை மர்மங்களுக்கும் விடை தரவேண்டிய கடமை, கொலையாளியை விரட்டிப்பிடித்த காவல்துறைக்கு இருக்கிறது.

0 Responses to கழுத்தறுபட்ட கொலையாளி! தொடரும் மர்ம முடிச்சு! ஓயாத சுவாதி கொலை அதிர்வுகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com