Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டனில் சுற்றுலாவாசி போல சுகங்களை அனுபவித்து வருகிறார் விஜய் மல்லையா என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வாராக் கடன் வைத்துவிட்டு, தப்பிச் சென்று லண்டனில் மிக சுதந்திரமாக  வசித்து வருகிறார் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், இதுக் குறித்துக் கிஞ்சித்தும் கவலைக் கொள்ளாமல், லண்டனில் சுகபோகமாக சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இதை மத்திய அரசும் கண்டுக்கொள்ளாமல் உள்ளது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லண்டனில் தமக்குச் சொந்தமாக இருக்கும் பண்ணை வீட்டில் வசித்து வரும் விஜய் மல்லையா, புத்தக வெளியீட்டு விழா, கார் ரேஸ் பார்வையாளர், கால்பந்து விளையாட்டு பார்வையாளர் என்று கலக்கி வருகிறார். கார் பந்தயத்தை நேரில் கண்டு ரசிக்க வந்த விஜய் மல்லையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, இந்திய அரசு எனது பாஸ்போர்ட்டை முடக்கி உள்ளது எரிச்சல் தருகிறது என்று கூறியுள்ளார். அதோடு, எனக்கு கார் பந்தயத்தைக் காணப் பிடிக்கும் என்பதால் நேரில் கண்டு ரசிக்க வந்தேன் இதில் என்ன தவறு என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to பிரிட்டனில் சுற்றுலாவாசி போல சுகங்களை அனுபவிக்கிறார் விஜய் மல்லையா..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com