Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுசீந்திரனுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியது.

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதியளித்தார். அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை நேற்று செவ்வாய்க்கிழமை கோப்பாய் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர்.

இந்நிலையில் மாணவன் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகிய மாணவன், பிணை விண்ணப்பம் செய்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாணவன் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவருக்குப் பிணை வழங்கக்கூடாது என பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர். எனினும், மாணவர் ஒன்றியத் தலைவர் எந்தவிதமான தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபடவில்லையென சட்டத்தரணி கூறியதையடுத்து, நீதவான் பிணை வழங்கினார்.

0 Responses to யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com