Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாதுவிடின், மீண்டும் யுத்தமொன்றுக்கு தூபம் போடும் வேலையாக அது மாறிவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலையடுத்து, தமிழ்- சிங்கள இணையத்தளங்கள் மோசமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதேபோன்று, தேசிய பல்கலைகழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “சிங்கள மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. எனவே இராணுவத்தினை விலக்க கூடாது. இராணுவம் இருந்தால் தான் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு” எனும் தொனியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிக மோசமான அறிக்கை ஆகும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் மிக மோசமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மாணவர்களை கிழக்கு மாகாண ஆளுநரோ, எவரும் சென்று பார்க்கவில்லை. இவர்களுக்காக எவருமே குரல் கொடுக்கவில்லை. ஆனால், சிங்கள மாணவர்கள் தாக்கபட்ட போது எத்தனை குரல்கள் ஓங்கி ஒழிக்கின்றன. வடக்கு மாகாண ஆளுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெரும் மாணவனை பார்த்து உள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க என இராணுவத்தினரும் புலனாய்வு பிரிவினரும் சில மாணவர்களை பயன்படுத்துகின்றார்கள். யாழ்ப்பாணத்திற்கு கல்வி கற்க வரும் சிங்கள மாணவர்கள் போர் வெற்றி சின்னங்களை கடந்தே வருகின்றார்கள். அந்த சின்னங்களை கடக்கும் போது அந்த மாணவர்களின் எண்ணங்களில் தமிழர்கள் தோற்றுப்போனவர்கள் என்ற எண்ணமே உருவாகும்.

இலங்கையில் 17 பல்கலைக்கழகங்கள் உண்டு அவற்றில் மூன்று பல்கலைக்கழகங்களே வடக்கு கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. அதில் அம்பாறையில் உள்ள பல்கலைக்கழகம் முஸ்லீம் மாணவர்களை பெரும்பான்மையாக கொண்ட பல்கலைக்கழகம் மற்றைய இரு பல்கலைக்கழகமான கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பவற்றில் தமிழ் மாணவர்கள் பெரும்பான்மையாக கற்று வந்தார்கள். அதனை இல்லாமல் செய்ய வேண்டும் எனும் நோக்குடனே கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பவற்றுக்கு சிங்கள மாணவர்கள் பெரும்பான்மையாக உள்வாங்க படுகின்றார்கள்.

கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடின் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூபம் போடும் நடவடிக்கையாக அமையும்.” என்றுள்ளார்.

0 Responses to யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவது நிறுத்தப்பட வேண்டும்: சுரேஷ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com