கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) நிழல் அமைச்சரவையில், பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்தப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
கூட்டு எதிரிணி நேற்று வியாழக்கிழமை நிழல் அமைச்சரவையொன்றை அமைத்தது. அதில், பிரதமர் பதவியோடு, பாதுகாப்பு மற்றும் மதவிவகார அமைச்சு மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ தன்னை நிழல் பிரதமர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்களிடம் கோரியுள்ளார்.
நிழல் அமைச்சரவைக்கு பதிலாக கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை நியமிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நிழல் அமைச்சரவையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையும் விலகியுள்ளார். அவருக்கு, நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிழல் அமைச்சரவை தொடர்பில் தான் முதலில் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நிழல் பிரதமர் பொறுப்பிலிருந்து மஹிந்த விலகல்!