Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை நகரில் இரண்டு இடங்களில் அம்மா திரையரங்கம் திறக்கப்பட உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியின்போது 110 விதியின் கீழ் அம்மா திரையரங்கம் கட்டப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், அப்போது சில இடங்களில் அம்மா திரையரங்கம் கட்டப்பட்டும், திறக்கப்படாமல் இருந்தது. அப்போது ஆட்சி முடிந்துபோன நிலையில், மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இந்நிலையில்க் முதற்கட்டமாக சென்னையில் 2 இடங்களில் அம்மா திரையரங்கம் திறக்கப்பட உள்ளன. இதில் கட்டப்பட்டு முடிக்கப்பட்டு இருக்கும் திரையரங்கம், கட்டுமானப் பணியில் இருக்கும் திரையரங்கம் என்று இரண்டு வகை திரையரங்கங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் எதை திறக்கலாம் என்று ஆலோசனை நடைப்பெற்று வருகிறதாம்.

இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். இதில் டிக்கெட் விலை குறைந்தபட்சம் 10 ரூபாயும், அதிகபட்சம் 30 ரூபாயும்தானாம்.

0 Responses to சென்னையில் இரண்டு இடங்களில் அம்மா திரையரங்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com