Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலத்தில் மக்கள் தேமுதிகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஸ்டாலின் முன்னிலையில், நடைப்பெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின் மக்கள் நல கூட்டணி என்று ஒன்றைத் தொடங்கினார்கள், இதை பி டீம் என்று கூட அழைத்தார்கள். அதில் இணைந்தவுடன்தான் சந்திர குமார் உள்ளிட்டவர்கள் பொங்கி எழுந்தனர். பி டீம் என்று இருந்தது இப்போது ஸீரோ டீம் ஆனது. இப்படி திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்று கூறினார்.

முன்னதாக பேசிய சந்திர குமார், தேமுதிகவில் இருப்பவர்களை திமுகவுக்கு அழைக்கும் உரிமை தமக்கு உள்ளது என்றும், கட்சியை நம்பி இருந்த நிர்வாகிகளை மதிக்காமல் நடந்துக்கொண்டவர் விஜயகாந்த் என்றும், அவரால் தாம் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் கூட பெறமுடியவில்லை என்றும் கூறினார். சந்திர குமார் ஸ்டாலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, தேமுதிகவினரை திமுக வசம் இழுத்து வருகிறது என்று, தேமுதிக குற்றச்சாட்டு வைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்: ஸ்டாலின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com