துருக்கியில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோற்கடிக்கப் பட்டு கைதான பல ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்களை துருக்கி அரசு கையாளும் முறைகள் அந்நாட்டு அரசுக்கும் மேற்குலகுக்கும் இடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த சதி முயற்சியுடன் தொடர்புடையதாகத் தான் சந்தேகிக்கும் 1400 துருப்புக்களை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளது துருக்கி அரசு. மேலும் மூத்த இராணுவக் கவுன்சிலையும் மறு சீரமைத்த துருக்கி அரசு அதன் முழு அதிகாரத்தையும் அதிபர் தாயிப் எர்டோகன் வசம் ஒப்படைத்துள்ளது. எர்டோகனின் குற்றச்சாட்டுக் கணக்குப் படி இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சியில் இராணுவம், நீதித்துறை, பொதுமக்கள் சேவை அமைப்புக்கள், பாடசாலைகள் என மொத்தம் 60 000 பேர் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் கைதாகியோ, தண்டிக்கப் பட்டோ அல்லது விசாரணை நிமித்தம் தடுத்து வைக்கப் பட்டோ இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதனால் தான் மேற்குலகம் இச்சந்தர்ப்பத்தில் துருக்கி அரசு உச்சக்கட்ட மனிதாபிமான அடிப்படையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்த சதி முயற்சியின் பின்னர் சுமார் 40% வீத துருக்கி இராணுவ ஜெனரல்கள் மற்றும் துருப்புக்கள் கைதாகி இருப்பதாகத் தெரிய வருகின்றது. மேலும் சதி முயற்சி முறியடிக்கப் பட்ட சமயத்தில் 237 பொது மக்கள் கொல்லப் பட்டும் 2100 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் துருக்கியின் YAS எனப்படு சுப்ரீம் இராணுவக் கவுன்சிலின் முக்கிய பதவிகளுக்கு அரசிலுள்ள பிரதி அமைச்சர்கள், உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்கள் நிர்ணயிக்கப் படுவார்கள் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன் முதலமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகிய இருவருக்கு மாத்திரமே YAS இல் இடமளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 1400 துருப்புக்களை பதவி நீக்கி மூத்த இராணுவக் கவுன்சிலை சீரமைத்தது துருக்கி