Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 31 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்று தொடக்கம் பல்லாயிரம் பெண்கள் தம்மை போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீர மரணத்தையும் அடைந்துள்ளனர்.

மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலின் பின்னர் பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்கியது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீர மரணமடைந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவானது விடுதலைப்புலிகளின் சகல வேலை திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.

0 Responses to விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 31 ஆண்டுகள் பூர்த்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com