Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவுகளில் மாத்திரம் சிக்கி 39 பேர் வரை பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக மலைப் பிரதேச நகரங்களான பியூப்லா மற்றும் வெராகுரூஸ் ஆகியவற்றில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

200 இற்கும்  அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இன்னும் சில நாட்களில் பசிபிக் சமுத்திரத்தில் தற்போது உருவாகி வரும் ஜவியர் என்ற புயலும் மெக்ஸிக்கோவைத் தாக்கக் கூடும் என அந்நாட்டு வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதப் படுத்தப் பட்டு வருகின்றன. தொடர்ச்சியான கனமழை மற்றும் நிலச்சரிவால் இந்த நகரங்களில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் தடை பட்டுள்ளதால் மீட்புப் பணிக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது அனர்த்த கால படைப் பிரிவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மெக்ஸிக்கோ நிலச்சரிவில் 39 பேர் பலி! - ஜவியர் புயல் எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com