Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

Trudeau அரசாங்கத்தின் சர்வதேச மேற்பார்வை அமைப்பு உலகில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளை சோதனையிட்டுக் கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் யுத்தம் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும் இந்த சர்வதேச அமைப்பு தன் கவனத்தை செலுத்தி வருகின்றது.

கடந்த மாதம் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டயோன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். எனவே இதன் காரணமாக இலங்கை மற்றும் கனடாவிற்கும் இடையில் இரு தரப்பு உறவுகள் தற்போது வலுப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளாக இலங்கையில் இடம் பெற்ற யுத்தமானது 2009 ஆண்டே முடிவுக்கு வந்தது.

யுத்தத்தினால் புலம்பெயர்ந்த அனேகமானவர்கள் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு யுத்தத்தின் போது தமிழர்கள் பாதிக்கப்பட்டமையினால் கனேடிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு அப்போது மோசமடைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சிறுபான்மையினர்கள் கனடாவில் புலம் பெயர்ந்தமை தொடர்பில் கனேடிய அரசாங்கம் எந்த எதிர்பையும் தெரிவிக்கவில்லை ஆனால்,சிறுபான்மையினரின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே கனேடிய அரசாங்கத்தின் நோக்கமாக தற்போது இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமைகளை பெற்றுக் கொடுப்பது சிறந்த வழி தான் ஆனால் இதற்காக நாம் மேலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர் டேவிட் பூபாலபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற போர் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்வது தொடர்பில் அப்போதைய இலங்கை அரசாங்கம் பல எதிர்ப்புகளையே தெரிவித்திருந்தது.

இருப்பினும் தற்போது கனடாவில் அதிகளவு புலம்பெயர் தமிழர்கள் வசித்து வருவதாகவும்,கனடா தனித்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கனடா அங்கம் வகிப்பது தொடர்பில் தாம் முயற்சித்து வருவதாகவும் பூபாலப்பிள்ளை கூறியுள்ளார்.

இருப்பினும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கு கனடாவினால் தற்போது முடியும் என்றும் பூபாலப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு கடந்த மாதம் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஸ்டீபன் டயோன் , பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கத்தை இலங்கைக்கு ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் அறிவித்திருந்தார். அத்துடன்,

இலங்கை அரசாங்கம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அரச சேவைகளை வழங்குவது தொடர்பில் தாம் பங்களிப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனடாவிடம் இருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது என்று டொராண்டோ மாத பத்திரிகை ஊடகவியலாளர் மகேஸ் அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் இடம் பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவது குறித்தான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஒப்பு கொண்டுள்ளமை இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு நல்ல அறிகுறி என்றும் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாம் மாற்றங்களை எதிர்பார்கின்றோம் சில மாற்றங்கள் விரைவில் ஏற்படுவதே இல்லை என்றும் அபேவர்தன கூறியுள்ளார்.

நாட்டிற்கு நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு கனடா அரசாங்கம் உதவ வேண்டும் என மங்கள சமரவீர தெரிவித்தார் என டயோன் கனடாவில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

யுத்தம் என்ற எண்ணத்திலிருந்து இலங்கை மேல் எழ வேண்டும் இது மிகவம் அவசியம் இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நாம் தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்துக் கொண்டே இருப்போம் என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கை வாழ் தமிழர்களுக்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கு கனடாவினால் முடியும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com