Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசியல் வரலாற்றில் கட்சியை பிளவுபடுத்திச் சென்று ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியவர்கள் யாருமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறும் வகையில் செயற்பட்டு வரும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியிலிருந்து எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டப்படாது நீக்கப்படுவர். அத்தோடு, அவர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சிக்கு 41 புதிய தொகுதி அமைப்பாளர்கள் நேற்று புதன்கிழமை நியமிக்கப்பட்டனர். அந்த நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்தில்  புதிய கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to கட்சியை பிளவுபடுத்தி சென்றவர்கள்; ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு இல்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com