Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைவிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மோசமானவர் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கும் வகையில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னாள் இராணுவத் தளபதி நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். அதன்போது, மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது, “எனது ஆரம்பம் மஹிந்த ராஜபக்ஷவினால் உருவானதல்ல. 35 வருடங்கள் நான் அவரின் ஆசீர்வாத்துடன் இராணுவத்தில் செயற்படவில்லை. இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி நான் அங்கு சேவையாற்றினேன். அவர் தவறிழைக்கும் போது அவருக்கு எதிராக பேச எனக்கு முதுகெலும்பு இருந்தது.

பிரபாகரன் அவருடைய அரசியல் கொள்கையின்படி நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்தார். எனினும், அவருக்கு எதிராக போராடிய இராணுவத்தின் குடும்பத்தை தாக்கும் வகையில் செயற்படவில்லை. எனினும், நான் ஜனநாயக ரீதியில் தேர்தலில் போட்டியிட்டமையினால் மஹிந்த ராஜபக்ஷ பொய்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னைத் தாக்கி சிறையில் அடைத்தார். அதுமட்டுமன்றி எனது பிள்ளைகளையும் பழி வாங்கினார். எனவே, அவ்வாறு செயற்பட்டவர் உறுதியாக பிரபாகரனைவிட மோசமானவர் என்பதனை நான் எந்த இடத்திலும் கூறுவேன்.” என்றுள்ளார்.

0 Responses to தலைவர் பிரபாகரனைவிட மஹிந்த மோசமானவர்: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com