பயங்கரவாத் தடைச் சட்டத்தினை நீக்குதல் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளிடம் வாக்குறுதி அளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து விலகி நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை யாழ். பிரதான பேரூந்து நிலையத்துக்கு முன்னால் போராட்டமொன்று நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதி மொழி வழங்கப்பட்ட போதும், அந்த உறுதிமொழிகள் பல மாதங்கள் கடந்தும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
ஏறக்குறைய 90 தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே நல்லிணக்கத்தைத் தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்துகிறது என்றால் அவர்கள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதன் மூலம் தான் அரசாங்கத்தின் உண்மையான நல்லிணக்கத்தை எமது மக்களுக்கு உணர்த்த முடியும். ஆகவே, எங்களுடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரை எமது மக்களின் போராட்டம் தொடரும்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி அரசாங்கமும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலைக்கழிக்கின்றது: தர்மலிங்கம் சித்தார்த்தன்