அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதா என்பது தொடர்பாக பரிசோதனை நடத்துவதற்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் சிவன் சுதன் தலைமையிலான ஐவரடங்கிய மருத்துவர் குழுவொன்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
விச ஊசி விவகாரம் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கவுமே, இந்தக் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்னர் குறித்த குழு தனது செயற்பாடுகளை ஆரம்பி க்கும்.
குறித்த குழுவின் கண்காணிப்பின் கீழ் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தனித்தனியாக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களிலுள்ள முன்னாள் போராளிகளை தவறாது பதிவுசெய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Responses to விச ஊசி விவகாரம்: பரிசோதனைகளுக்காக மருத்துவர் குழுவை பரிந்துரைத்தது வடக்கு மாகாண சுகாதார அமைச்சு!