Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டனில் தங்குவதற்கான அனுமதியை மேற்கு தொகுதி லிபரல் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வில்லியம் மூலம் பெற்ற இலங்கை தமிழ் இளைஞர் சிவராஜா சுகந்தன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் தற்போது பிரிட்டன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் தொடர்பில் தெரியவருவதாவது,

இவர் 1999 ஆம் ஆண்டு தன் 14 வயதில் பிரித்தானியாவிற்கு சென்றார். 2003 ஆம் ஆண்டு அவரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அவரின் மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்தும் பிரிட்டன் அகதிகள் முகாம்களில் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் இவரை நாடு கடத்த தீர்மானித்திருந்தனர்.

ஆனால் இவரை நாடு கடத்துவதற்கு எதிராக அங்குள்ள தமிழ் மக்கள் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

சிவராஜா சுகந்தன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நாடு கடத்தல் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழ் மக்கள் 800 பேர் மனுவினை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

குறித்த பிரச்சினை தொடர்பில் அச்சமயம் சுகந்தனிற்கு அடைக்கலம் வழங்குவதற்கு வில்லியம்ஸ் குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீனிடம் ஆதரவு கோரியிருந்தார். இதே சமயம் பிரிஸ்டலிலும் உள்ள மக்கள் சுகந்தனை நாடு கடத்துவதற்கு எதிராக 2010 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறான தாக்கங்கள் காரணமாகவும், சுகந்தன் இரண்டு குழந்தைகளின் தந்தை என்ற அடிப்படையில் அவருக்கு 2011 இல் பிணை வழங்கப்பட்டது.

சிவராஜா சுகந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு முக்கிய காரணம் வில்லியம்ஸ் என அகதிகள் மைய முகாமையாளர் கெரோலின் பீட்டி (Caroline Beatty) தெரிவித்ததுடன். அவருக்கு தனது நன்றிகளையும் அகதிகள் மைய முகாமையாளர் கூறியிருந்தார்.

விடுதலையான பின்னர் வில்லியம்ஸை சந்தித்த சுகந்தன் தன்னுடைய விடுதலை காரணமாக நன்றிகளையும் அவருக்கு தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரிஸ்டல் பகுதியில் உள்ள தன் நண்பர்களை பார்வையிடுவதற்காக சுகந்தன் சென்று. அங்கு மிகவும் சந்தோசமாக அவருடைய நண்பர்களுடன் சிறிது காலம் தங்கியிருந்தார் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறாக 3 வருடங்கள் பிரிஸ்டல் பகுதியில் தங்கியிருந்த பின்னர் சிவராஜா சுகந்தன், 21 வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே சிவராஜா சுகந்தன் கைது செய்யப்பட்டு பிரிஸ்டல் நீதி மன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள நேர்ந்தது. கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய போது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அஞ்சலி கொஹில் (Anjali Gohil) உண்மைகளின் அடிப்படையில் தனது சாட்சியங்களை தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் தண்டனை அறிக்கை தயாரிப்பதற்காக பீட்டர் டவ்ளர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி ஒத்திவைத்தார்.

நான் ஒரு தண்டனை வழங்கும் நீதிபதியாக இருக்க முடியாது என நீதவான் சுகந்தனை பார்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு 19 வருடங்கள் சிறை தண்டணை வழங்குவதே சட்டம் என்றும் நீதவான் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவராஜா சுகந்தன் 37 நாட்களாக சிவராஜா சுகந்தன் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.




0 Responses to லண்டனில் பலாத்கார குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் சிறையில்.. (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com