அரச புனர்வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரை வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு, யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க வைத்தியர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 58வது அமர்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு, பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி போடப்பட்ட விடயத்தில் சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானப்படையின் வைத்தியர் குழு, முன்னாள் போராளிகளை வைத்தியப் பரிசோதனை செய்ய வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் கோரினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இது குறித்து தான் அமெரிக்கத் தூதுவரிடம் பேசியதாகவும், முன்னாள் போராளிகள் சிலரை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்கக் குழுவினர் சம்மதித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to விச ஊசி விவகாரம்; முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க வைத்தியக்குழு சம்மதம்: விக்னேஸ்வரன்