Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு எதிரணி எனும் பெயரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்திருப்பவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சி வழங்கிய பொறுப்புக்களை நிறைவேற்றாததாலேயே 13 பேர் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு தகுதியான புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். இது, கட்சியை புனரமைக்கும் திட்டத்தின் கீழ்  முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடக மாநாடு நேற்று வியாழக்கிழமை கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.  அங்கு கருத்து வெளியிடும் போதே துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் 10 வருட ஆட்சியில் கட்சியை பலப்படுத்துவதை விட ஒரு குடும்பத்தை மட்டும் பலப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தனிப்பட்ட ரீதியான பிரபலமோ வேறு விடயங்களோ எமக்கு முக்கியமல்ல. கட்சி செயற்பாடுகளை முன்னெடுப்பதே பிரதானமானது என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த ஆதரவாளர்களை பழிவாங்கவில்லை: துமிந்த திசாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com