Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நீடித்துவரும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து, சுபீட்சமான நாட்டினை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இனத்தையும், மதத்தையும் விற்று தங்களுடைய நலன்களை பேணுவதற்கு  பாராளுமன்றத்திலுள்ள சில உறுப்பினர்கள் முயற்சிக்கின்றார்கள். ஆனாலும், அவர்கள் தங்களது விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் அதியுயர்ந்த நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வு காலி முகத்திடலில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அர்ஜூன ரணதுங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் சமாதானம் மற்றும் சகவாழ்வினை பாதுகாத்து, தேசத்தை கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

தங்கள் நலன்களை பற்றி மாத்திரம் சிந்திக்கின்ற அரசியலை நிறுத்தி சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காலம் எழுந்துள்ளது. ஒரு சில அரசியல்வாதிகள் குறுகிய நோக்கத்துக்காக சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றார்கள்.

அடுத்த தலைமுறைக்கு இந்நாட்டினை கையளிக்கும் பொழுது இனங்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகள் தீரக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் பிரச்சினைகளற்ற நாட்டினை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com