பலம் பொருத்திய பிரபலமான தொகுதி அமைப்பாளர்களை நீக்கியதன் மூலம்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிளவு படுத்திவிட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கையைானது ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலரை நீக்கி, புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களான பவித்ரா வன்னியாராச்சி, கெஹலிய ரம்புக்வெல, சி.பி.ரத்நாயக்க, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்த்தன, மஹிந்த யாபா அபேவர்த்தன உள்ளிட்டவர்கள் அமைப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது கூட்டு எதிரணியில் செயற்படும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களைப் பழிவாங்கும் புதிய முறையாகும். சுதந்திரக் கட்சியை இல்லாதொழிக்கும் படிமுறையின் இரண்டாவது கட்டத்தையே நாங்கள் இம்முறை கண்டுகொண்டிருக்கின்றோம்.
இதன் முதலாவது கட்டம், சுதந்திரக் கட்சியினால் நிர்வகிக்கப்பட்டு வந்த அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்பட்டமையாகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்த உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெளிவான நன்மைகள் கிடைத்திருக்கின்றன.” என்றுள்ளது.

0 Responses to சுதந்திரக் கட்சியை மைத்திரி பிளவு படுத்திவிட்டார்: மஹிந்த