கடந்த ஆட்சியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் தான் இன்னமும் கட்டிக் காத்துவரும் இரகசியங்களை வெளியிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது, நகைப்புக்குரியது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பந்துல குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் இரகசியங்களை வெளியிடப் போவதாக கூறியிருக்கின்றார். அவர் கூறுவது நகைப்புக்குரியது. அவர் இரகசியங்களை வெளியிட்டால், அதில் அவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இரகசியங்களை வெளியிடப் போவதாக மைத்திரி கூறுவது நகைப்புக்குரியது: பந்துல குணவர்த்தன