Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு- கிழக்கிற்கு வெளியேயுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக தன்னிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் ஆனாலும், தான் அதற்கு அடிபணியவில்லை என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

நல்லாட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் முற்போக்குக் கூட்டணியினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னை வேட்பாளராகப் போட்டியிடுமாறும், அமைச்சர் திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரை எனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பேரம் பேசப்பட்டது.  இதற்காக பல கோடி ரூபாய்களை எமக்கு வழங்குவதற்கு ஒரு கும்பல் முன்வந்தது.

கடந்த 2005ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து வடக்கு, கிழக்கு மக்களை வாக்களிக்காமல் செய்து ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்பட்டது போன்று, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதுபோன்று வெற்றியீட்டுவதற்கு சிலர் முயற்சித்தனர்.” என்றுள்ளார்.

0 Responses to கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் என்னோடு பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com