Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வறுமையின் உச்சத்தை உலகறியும் வகையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த மனைவியை தோளில் சுமந்து சாலையில் சென்ற மனிதர் குறித்தத் தகவல் வெளியாகி மக்கள் மத்தியில்  பச்சாதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பவனிபட்னா பகுதியில் நேற்று காலை ஒரு மனிதர் தனது தோளில் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கும் தனது மனைவியின் பிணத்தை சுமந்து கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 12 வயதான அவரது மகள் அந்த மனிதருடன் நடந்து சென்றார்.என்கிற தகவல் வெளியாகி உள்ளது.மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த தன்னுடைய மனைவியை வீட்டிற்கு கொண்டு செல்ல வாகன வசதி எதுவும் கிடைக்காததால் இவ்வாறு அந்த மனிதர் நடந்தே சென்று கொண்டிருந்தார். மருத்துவமனையில் இருந்து அவரது வீடு சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்று தெரிய வருகிறது. 

சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்த பின்னர் தொலைக்காட்சி குழு ஒன்று அவரை அணுகி விசாரித்துள்ளது. அப்போது, ஒடிசா மாநிலத்தின் பின் தங்கிய மாவட்டமான காளஹந்தியை சேர்ந்த மஜ்ஹி என்ற அந்த மனிதரின் 42 வயது மனைவி அமங் தேய் காசநோய் தாக்கி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரிய வந்தது.மேலும், நான் மிகவும் ஏழை மனிதன் என்றும் என்னால் இறந்த மனைவியை கொண்டு செல்ல வாகனம் தயார் செய்ய முடியாது என்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறினேன். எந்த உதவியும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர்” என்று மஜ்ஹி அவர்களிடம் கூறினார். 

உடனடியாக அந்த தொலைக்காட்சி குழுவினர் மாவட்ட கலெக்டரை தொடர்ந்து கொண்டு மீதமுள்ள 50 கிலோமீட்டர் செல்ல வாகனம் ஏற்பாடு செய்தனர்.இறந்த மனைவியை கொண்டு செல்ல வாகனம் கிடைக்காமல் சாலையில் தோளில் சுமந்து கொண்டு சென்ற கணவர் பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to வறுமையின் உச்சம்: ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த மனைவியை தோளில் சுமந்து சாலையில் சென்ற மனிதர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com