உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து போட்டியிடும் என்று, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடைபெற்றது. மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்கள் வைகோ திருமாவளவன் முத்தரசன் ஆகியோர் விஜயகாந்த் துக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்த நாள் கேக் வெட்டினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டு இயக்கம் இணைந்து செயல்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் மாவட்ட அளவில் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசும்போது உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி சேர்வது குறித்து பின்னர் தெரியவரும் என்றார். சட்டப்பேரவையில ஒட்டுமொத்தமாக 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழக வரலாற்றில் கரும்புள்ளி எனக் குறிப்பிட்டார்.

0 Responses to உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து போட்டியிடும்: வைகோ